முகப்புகோலிவுட்

‘திருமண மண்டபமான திரையரங்கம்!’- ‘பேட்ட’ கொண்டாட்டத்தில் நடந்த சுவாரஸ்யம்

  | January 10, 2019 12:33 IST
Petta Celebration

துனுக்குகள்

  • ராயப்பேட்டை திரையரங்கில்தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
  • பல திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்.
  • பேட்ட படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ள திரைப்படம் ‘பேட்ட'. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக் போன்ற பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இன்று அதிகாலையிலேயே ‘பேட்ட' சிறப்பு காட்சிகள், பல திரையரங்குகளில் போடப்பட்டுள்ளன. இதனால், நேற்றிரவு முதலே திரையரங்குகளில் பெரும் அளவிலான ரஜினி ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் ஒரு திரையரங்கில், ‘ரஜினி ரசிகர் மன்றம்' சார்பில் இளம் காதல் ஜோடிக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்பரசு - காமாட்சி என்னும் சென்னையைச் சேர்ந்த இளம் ஜோடிகள் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் தீவிர ரஜினி ரசிகர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ‘பேட்ட' படத்தின் வெளியீட்டை சிறப்பாக கொண்டாடும் விதத்தில், இன்று திரையரங்கு வளாகத்திலேயே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். தங்களது விருப்பத்தை இருவரும், தென் சென்னை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் அசோக்கிடம் கூறியுள்ளனர். 
 
oncjpbh8


இதையடுத்து, அவர் தலைமையில் இருவருக்கும் ரசிகர்கள் ஆசியுடன் திரையரங்கிலேயே திருமணம் நடந்துள்ளது. மணப்பெண்ணுக்கான சீதனத்தை ரஜினி ரசிகர் மன்றம் வழங்கியுள்ளது. இந்தத் திருமணத்துக்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அன்பரசு, காமாட்சி கழுத்தில் தாலி கட்டியபோது ரஜினி படம் அச்சிடப்பட்ட பலூன்களை பறக்கவிட்டுள்ளனர் ரசிகர்கள்.
மிகவும் வித்தியாசமாக நடந்த தனது திருமணம் குறித்து மணமகனான அன்பரசு, ‘மகிழ்ச்சி' என்று பன்ச் கொடுத்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்