முகப்புகோலிவுட்

அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இடம்பிடித்த ரஜினி, விஜய், நயன்தாரா

  | December 06, 2018 16:00 IST
Forbes India

துனுக்குகள்

  • ‘ஃபோர்ப்ஸ்’ நாளிதழ் அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை வெளியிடுகிறது
  • இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடு
  • முதல் இடத்தை பாலிவுட் நடிகர் சல்மான் கான் (ரூ.253.25 கோடி) பிடித்துள்ளார்
ஒவ்வொரு வருடமும் ‘ஃபோர்ப்ஸ்' நாளிதழ் பல்வேறு துறைகளில் சாதித்து அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது, இந்த ஆண்டு (2018) அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 100 பேர் கொண்ட இப்பட்டியலில் முதல் இடத்தை பாலிவுட் நடிகர் சல்மான் கான் (ரூ.253.25 கோடி) பிடித்துள்ளார்.

3-வது இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் (ரூ.185 கோடி) உள்ளார். 4-வது இடத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் (ரூ.112.80 கோடி) உள்ளார். 6-வது இடத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் (ரூ.97.50 கோடி) உள்ளார். 7-வது இடத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (ரூ.96.17 கோடி) உள்ளார். 8-வது இடத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் (ரூ.84.67 கோடி) உள்ளார். 10-வது இடத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் (ரூ.74.50 கோடி) உள்ளார். 11-வது இடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடி) உள்ளார்.

12-வது இடத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் (ரூ.58.83 கோடி) உள்ளார். 13-வது இடத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (ரூ.56 கோடி) உள்ளார். 14-வது இடத்தில் நடிகர் ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) உள்ளார். 16-வது இடத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா (ரூ.45.83 கோடி) உள்ளார். 17-வது இடத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் (ரூ.44.50 கோடி) உள்ளார். 19-வது இடத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் (ரூ.37.85 கோடி) உள்ளார். 21-வது இடத்தில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் (ரூ.33.67 கோடி) உள்ளார்.
24-வது இடத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் (ரூ.31.33 கோடி) உள்ளார். 25-வது இடத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் (ரூ.31 கோடி) உள்ளார். 26-வது இடத்தில் நடிகர் ‘தளபதி' விஜய் (ரூ.30.33 கோடி) உள்ளார். 29-வது இடத்தில் நடிகர் விக்ரம் (ரூ.26 கோடி) உள்ளார். 34-வது இடத்தில் நடிகர்கள் சூர்யா – ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) உள்ளனர். 49-வது இடத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (ரூ.18 கோடி) உள்ளார். 53- வது இடத்தில் நடிகர் தனுஷ் (ரூ.17.25 கோடி) உள்ளார். 69-வது இடத்தில் நடிகை ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா (ரூ.15.17 கோடி) உள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்