விளம்பரம்
முகப்புகோலிவுட்

பிரம்மாண்ட செட்டில் டூயட் பாடி ஆடப்போகும் ரஜினி – எமி

  | July 18, 2017 19:30 IST
Movies

துனுக்குகள்

  • சூப்பர் ஸ்டார் கைவசம் ‘2.0, காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது
  • ஷங்கரின் ‘எந்திரன்’ முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • புரமோஷனுக்காக ஹாட் ஏர் பலூனை லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் பறக்கவிட்டனர்
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பரபரப்பாக தயாராகி வரும் படங்கள் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’. இதில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடி வருகிறார். ரஜினிகாந்துக்கு எதிராக நம்மை மிரட்டும் வில்லன் வேடங்களில் அக்ஷய் குமார், சுதன்ஷு பாண்டே நடிக்கின்றனராம்.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கடந்த வருடம் மும்பையில் நடந்த படத்தின் அறிமுக விழாவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியிடப்பட்டது. இப்போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற அக்டோபர் மாதம் துபாயில் நடத்தவுள்ளனர். சமீபத்தில், புரமோஷனுக்காக படத்தின் போஸ்டர்ஸ் பொறிக்கப்பட்ட ஹாட் ஏர் பலூனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் பறக்கவிட்டனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே பேலன்ஸாம். இப்பாடலுக்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாடல் காட்சியின் ஷூட்டிங்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) துவங்கி தொடர்ந்து 12 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனராம். ஏற்கெனவே, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25-ஆம் தேதி ‘3டி’ தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்