விளம்பரம்
முகப்புகோலிவுட்

25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினி – குஷ்பூ கூட்டணி

  | March 20, 2017 16:16 IST
Movies

துனுக்குகள்

  • கபாலி திரைப்படம் உலகம் முழுக்க நல்ல வசூல் செய்தது
  • நடிகர் தனுஷ் இப்படத்தை தயாரிக்க உள்ளார்
  • பாலிவுட் நடிகை வித்யா பாலன் மிக முக்கிய ரோலில் நடிக்க உள்ளார்
கபாலி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் – இயக்குநர் பா.ரஞ்சித் இணையும் அடுத்த படம் முடிவாகிவிட்ட நிலையில், இப்படம் கபாலி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இப்படத்தில் ஏறத்தாழ 25 வருடங்களுக்குப் பிறகு நடிகை குஷ்பு ஒருமுக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதை அவருடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலிருந்து ஒரு ரீ-டிவிட் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் இணையும் இப்படத்தை ரஜினியின் மருமகம்னும் நடிகருமான தனுஷின் வொண்டர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் எந்திரன் 2.0 திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் நடிகை வித்யாபாலனும் இப்படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் நடிகை குஷ்பூ இணைந்து தர்மத்தின் தலைவன், மன்னன், அண்ணாமலை, மற்றும் பாண்டியன் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்