முகப்புகோலிவுட்

ரஜினிகாந்த் கட்டிய பாபாஜி தியான நிலையம்

  | November 14, 2017 17:25 IST
Sri Babaji Dhyana Nilayam

துனுக்குகள்

  • தங்குவதற்கும் தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் தியான நிலையம்
  • ரஜினியும், அவரது நண்பர்களும் இணைந்து இதனை கட்டியுள்ளனர்
  • இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழாவை விமர்சையாக நடந்தியுள்ளனர்
நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரின் நண்பர்கள் திரு. V.S.ஹரி, திரு. V.D.மூர்த்தி, திரு. விஸ்வநாதன் (வழக்கறிஞர்), திரு. ஸ்ரீதர் ராவ், திரு. திலீபன் (டாக்டர்), திரு. வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து இமய மலையில் ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும், தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் "ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்" கட்டியுள்ளனர்.

இந்த தியான நிலையத்தை, மஹா ஸ்ரீ பாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு, இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழாவை விமர்சையாக நடத்தியுள்ளனர். விரைவில் ஸ்ரீ பாபாஜி தியான நிலையத்திற்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வரவுள்ளதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்