முகப்புகோலிவுட்

‘2.0 & காலா’ பற்றி சூப்பர் ஸ்டாரின் அறிவிப்பு

  | October 31, 2017 13:47 IST
2.0 Release Date

துனுக்குகள்

  • சூப்பர் ஸ்டார் கைவசம் ‘காலா, 2.0’ ஆகிய 2 படங்கள் உள்ளது
  • ‘2.0’வின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
  • ‘காலா’ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளதாம்
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாம். இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏற்கெனவே, இவ்விரண்டு படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, இப்படங்களின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. கடந்த வாரம் துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘2.0’வின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

தற்போது, துபாயிலிருந்து நேற்று (அக்டோபர் 30-ஆம் தேதி) இரவு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. அப்போது, விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சூப்பர் ஸ்டார், “அடுத்த வருடம் (2018) முதலில் ஷங்கரின் ‘2.0’ தான் ரிலீஸாகும். அதன் பிறகே, பா.இரஞ்சித்தின் ‘காலா’ வெளியாகும்” என்று கூறினார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்