முகப்புகோலிவுட்

கங்கிராட்ஸ் ரஜினி, தேங்க்ஸ் கமல் – ரசிகர்கள் குஷி

  | November 15, 2017 10:56 IST
Kamal Haasan

துனுக்குகள்

  • ரஜினி, கமல் இருவருக்கும் என்.டி.ஆர்.தேசிய விருது
  • இவ்விருதுகளை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
  • கமலின் ஸ்டேட்டஸுக்கு ரஜினி பதில் டிவிட் தட்டியுள்ளார்
தெலுங்கு திரைத்துறையினருக்காக ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் உயரிய விருது ‘நந்தி விருது’. நேற்று மாலை 2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளுக்கான நந்தி விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. மேலும், திரையுலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு என்.டி.ஆர் தேசிய விருது வழங்கப்படுவது வழக்கம். இம்முறை 2014-ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய விருது நடிகர் கமல்ஹாசனுக்கும், 2016-ஆம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.


இது குறித்து கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் “என்.டி.ஆர். தேசிய விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள்” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். தற்போது, இதற்கு பதில் டிவிட் தட்டிய ரஜினிகாந்த் “நன்றி கமல். உங்களுக்கும் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். இவர்களின் டிவிட்களை பார்த்து ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். பின், இருவருமே இவ்விருதுகளை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்