விளம்பரம்
முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு நிச்சயம் வருவார் - லதா ரஜினிகாந்த்

  | October 04, 2017 12:06 IST
Rajinikanth Enter Politics

துனுக்குகள்

  • அரசியலுக்கு குதிக்க உள்ளதாக கமல்ஹாசன் வெளிப்படையாக கூறிவிட்டார்
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதுபற்றி இதுவரை தெளிவாக அறிவிக்கவில்லை
  • ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவது பற்றி மிக விரைவில் அறிவிப்பார்
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்கு வருவார்கள் என்கிற கருத்துக்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் விவாதமே கிளப்பியது. இந்த நிகழ்வில், தான் விரைவில் அரசியலுக்கு குதிக்க உள்ளதாக உலகநாயகன் கமல்ஹாசன் வெளிப்படையாக கூறிவிட்டார். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதுபற்றி இதுவரை தெளிவாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சமூக சேவை விழாவில் கலந்து கொண்டு பேசிய திருமதி. லதா ரஜினிகாந்த் பேசியபோது “ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவது பற்றி மிக விரைவில் அறிவிப்பார். அவர் தமிழக அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்படும். அவர் மனதில் எது தோன்றுகிறது அதனை தைரியமாக நடைமுறைப் படுத்தும் பழக்கமுடையவர். ஆனால், அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். தமிழகத்தை வளப்படுத்த அவரிடம் நிறைய திட்டங்கள் உள்ளது” என்றுஅவர் கூறினார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்