முகப்புகோலிவுட்

முதல் ஷெடியூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்

  | July 11, 2018 12:24 IST
Rajini Karthik Subbaraj Film

துனுக்குகள்

  • ரஜினி கைவசம் ‘2.0’ & கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது
  • இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வந்தது
  • இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது
பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், தீபக் பரமேஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ரஜினியின் 165-வது படமான இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் முதல் ஷெடியூலை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்