முகப்புகோலிவுட்

செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கத்தினரால் '2.0'வுக்கு வந்த சிக்கல்

  | November 28, 2018 11:37 IST
2.0

துனுக்குகள்

  • ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது
  • இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • படத்தை நாளை (நவம்பர் 29-ஆம் தேதி) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘காலா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0' மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட' என 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0'வை ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமிஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர், மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனராம். படத்தை நாளை (நவம்பர் 29-ஆம் தேதி) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் செல்போன் குறித்து தவறாக சித்தரித்திருப்பதால் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்று இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கம், மத்திய தணிக்கை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் மனு கொடுத்துள்ளது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்