முகப்புகோலிவுட்

3D-யில் ஹிட்டடித்தாலும், 2D-யில் டல்லடிக்கும் ரஜினியின் ‘2.0’

  | December 07, 2018 18:42 IST
Rajinikanth

துனுக்குகள்

  • கடந்த நவம்பர் 29-ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் ‘2.0’
  • இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • இப்படத்தை 3D-யில் பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
‘காலா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி 3D தொழில்நுட்பத்தில் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான படம் ‘2.0'. ‘எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான இதனை ஷங்கர் இயக்கியிருந்தார். ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியிருந்தார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்திருந்தார். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் ரூ.500 கோடிக்கு மேல் கல்லா கட்டிய வண்ணமுள்ளது. இப்படத்தை 3D-யில் பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆகையால், 2D வெர்ஷன் திரையிடப்பட்ட திரையரங்குகளில் வசூல் மந்தமாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்