முகப்புகோலிவுட்

திரையரங்குகளில் திரையிடப்படும் ரஜினியின் '2.0' 3D டீசர்

  | September 10, 2018 12:56 IST
Rajini

துனுக்குகள்

  • இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்
  • படத்தை நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
  • இதன் டீசரை மக்கள் 3D-யில் பார்ப்பதற்காக கடின உழைப்பு போடப்பட்டு வருகிறதாம
‘காலா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ என 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஏற்கெனவே, வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், 3 மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிரிக்கச் செய்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில், படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியிடவிருப்பதாக ஷங்கர் அறிவித்தார்.

தற்போது, இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிரம்மாண்டமான டீசரை மக்கள் 3D-யில் பார்ப்பதற்காக கடின உழைப்பு போடப்பட்டு வருகிறதாம். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள எந்தெந்த திரையரங்குகளில் படத்தின் டீசர் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படுமாம். 3D-யில் ரிலீஸாகும் அதே நேரத்தில், 2D திரையரங்குகளில் 2D தொழில்நுட்பத்திலும் டீசர் திரையிடப்படுவதோடு, யூ டியூபிலும் வெளியிடப்படுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்