முகப்புகோலிவுட்

ரஜினியின் '2.0' பட டீசர் ரிலீஸ் எப்போது?

  | May 23, 2018 14:21 IST
Rajinikanth 2.0

துனுக்குகள்

 • ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் 2.0
 • இந்த வருடத்தில் அதிக எதிர்பார்ப்பிலிருக்கும் படம் இது
 • இப்படத்தின் டீசர் வெளியீடு பற்றி தகவல் வெளியாகியுள்ளது
'சிவாஜி', 'எந்திரன்' படங்களுக்குப் பிறகு ஷங்கர் - ரஜினி மீண்டும் இணைந்திருக்கும் படம் `2.0'. 2010ல் வெளியான `எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இதில் அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன், சுதன்சு பாண்டே எனப் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கான இறுதிகட்ட பணிகள் நடந்துவருகிறது. சென்ற வருட தீபாவளிக்கே வெளியாகும் என சொல்லப்பட்டும், வி.எஃப்.எக்ஸ் பணிகள் தாமதமானதால் தள்ளிப் போனது. படத்தின் டீசரையாவது கண்ணில் காட்டுங்கள் என காத்திருகிறார்கள் ரசிகர்கள். சில மாதங்கள் முன்பு லைக்கா சார்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் படத்தின் டீசர் திரையிடப்பட்டதும், அது லீக்காகி இணையத்தில் பரபரப்பானதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நடக்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருக்கிறது. மும்பையில் நடைபெற இருக்கும் இப்போட்டியின் போது 2.0 பட டீசரை வெளியிடலாம் என யோசித்து வருகிறார்களாம் படக்குழுவினர். ஆனாலும், இது பற்றிய எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்