முகப்புகோலிவுட்

உலகமெங்கும் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸாகிறதா ரஜினியின் '2.0'?

  | November 22, 2018 18:14 IST
Rajinikanth

துனுக்குகள்

  • ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’வை ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது
  • இதன் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது
  • படத்தை நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘காலா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0' மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட' என 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0'வை ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார்.

மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர், மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனராம்.

படத்தை வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, 1991-ஆம் ஆண்டு ரஜினியின் ‘தளபதி' படம் 100 தியேட்டர்களிலும், 2007-ஆம் ஆண்டு ‘சிவாஜி' படம் 1000 தியேட்டர்களிலும் ரிலீஸானதை சாதனையாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்