முகப்புகோலிவுட்

சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ ரிலீஸில் மாற்றமா?

  | November 14, 2017 17:43 IST
Rajinikanth 2.0

துனுக்குகள்

  • இதன் முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • 2 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், 2 மேக்கிங் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. சமீபத்தில், படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடந்தது.

இதன் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் படத்தின் டீஸர் ரிலீஸ் நவம்பர் 22-ஆம் தேதி ஹைதராபாத்திலும், டிரையிலர் ரிலீஸ் டிசம்பர் 12-ஆம் தேதி சென்னையில் நடத்தவும், படத்தை ஜனவரி 25-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருந்தனர். தற்போது, 3D தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணி துல்லியமாகவும், உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்பதாலும், அதற்கு சில கால அவகாசம் எடுக்குமாம். ஆகையால் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதியில் வெளியாவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்