விளம்பரம்
முகப்புகோலிவுட்

'காலா'வை சென்னையில் வந்து பார்த்து ரசித்த ஜப்பான் ஜோடி

  | June 07, 2018 16:07 IST (New Delhi)
Rajinikanth Fans

துனுக்குகள்

  • இதில் நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்
  • சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்
  • ஒசாகாவில் ஜூன் 10-ஆம் தேதி தான் ‘காலா’ ரிலீஸாகவிருக்கிறது
‘கபாலி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் இன்று (ஜூன் 7-ஆம் தேதி) ரிலீஸாகியுள்ள படம் ‘காலா’. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் சூப்பர் ஸ்டாரின் கேரியரில் 164-வது படமாம். இதனை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.



இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நானா படேகர், ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இந்நிலையில், ஜப்பானில் உள்ள ரஜினியின் ரசிகர்களான ஒரு ஜோடி இன்று அதிகாலை படத்தின் முதல் காட்சியை சென்னையில் வந்து பார்த்து ரசித்துள்ளனர். இது குறித்து அவர்கள் பேசுகையில் “ஏற்கெனவே ‘எந்திரன், கோச்சடையான், கபாலி’ ஆகிய படங்களையும் சூப்பர் ஸ்டாருக்காக சென்னை வந்து தான் பார்த்தோம். இப்போது ‘காலா’ படத்தை பார்க்க வந்துள்ளோம். ஜப்பானில் உள்ள ஒசாகாவில் வருகிற ஜூன் 10-ஆம் தேதி தான் ‘காலா’ ரிலீஸாகவிருக்கிறது. அதற்கு முன்பே ‘காலா’வை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி” என்று தமிழிலையே தெரிவித்தனர்.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்