முகப்புகோலிவுட்

ரஷ்யாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் 'காலா' - தமிழ் ரசிகர்கள் கொண்டாட்டம்!

  | June 13, 2018 00:18 IST
Kaala Movie

துனுக்குகள்

  • ரஷ்யாவில் வாழும் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்
  • 40 ஆண்டுகளில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் 'காலா'
  • எல்லா ரசிகர்களிடையேயும் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது 'காலா'
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படமான 'காலா', உலகம் முழுக்க கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 'ரஜினி படமாகவும் அல்லாமல் ரஞ்சித் படமாகவும் அல்லாமல் போய்விட்ட படம்' என விமர்சிக்கப்பட்ட 'கபாலி' திரைப்படம் போலல்லாமல், எல்லா ரசிகர்களிடையேயும் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது 'காலா'. ரஜினி மற்றும் ரஞ்சித் ரசிகர்களை ஒருசேர திருப்திப்படுத்தும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது 'காலா'.

இந்நிலையில், ரஷ்யாவில் வெளியாகும் முதல் நேரடி தமிழ் திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது 'காலா' திரைப்படம். 40 ஆண்டுகளில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் 'காலா'. இதற்கு முன், சமீபத்தில் 'மெர்சல்' 'பாகுபலி' உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் எல்லாமே ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான தமிழ் படங்களே ஆகும் (2010ஆம் ஆண்டில் அஜித் நடிப்பில் வெளியான 'அசல்' திரைப்படமே, ரஷ்யாவில் வெளியான முதல் தமிழ் டப்பிங் திரைப்படம்).

டப்பிங் செய்யப்படாமல் நேரடியாக தமிழ் மொழியிலேயே ஒரு தமிழ் திரைப்படம் நேற்று வெளியானதையொட்டி, ரஷ்யாவில் வாழும் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். 'ரஷ்யாவில் எங்கள் தாய்மொழியில் ஒரு படத்தை பார்த்து ரசிக்க எங்களுக்கு 40 வருடம் ஆகியிருக்கிறது' என உற்சாக மிகுதியில் காலாவை கொண்டாடி வருகின்றனர் ரஷ்யா தமிழர்கள்.
சினிமாக்களுக்கும் மற்ற பொழுதுபோக்குகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த நீண்ட கால தடை சமீபத்தில் சவூதி அரேபியாவில் நீக்கப்பட்டுள்ள நிலையில், சவூதியில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் என்கிற பெருமையும் 'காலா' திரைப்படத்தையே சேரும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்