ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், ஷபீர், இயக்குநர்கள் சசிகுமார் - மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று படத்தின் செகண்ட் டிராக்கான ‘உல்லால்லா' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அனைத்து பாடல்களையும் டிசம்பர் 9-ஆம் தேதியும், படத்தை பொங்கலுக்கும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.