முகப்புகோலிவுட்

காலா படத்தின் சென்னை ஷெட்டியூல் எப்போது துவங்குகிறது?

  | July 04, 2017 14:26 IST
Movies

துனுக்குகள்

  • மருத்துவப்பரிசோதனைக்காக ரஜினி அமேரிக்க சென்றுள்ளார்
  • ‘காலா’ படக்குழுவினர் அனைவரும் சென்னைக்கு திரும்பிவிட்டனர்
  • சென்னைக்கு அருகில் மிக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்று வந்த ‘காலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி அமேரிக்க சென்ற நிலையில் ‘காலா’ படக்குழுவினர் அனைவரும் சென்னைக்கு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், காலா திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் (இம்மாதம்) 10-ந் தேதி முதல் சென்னையில் துவங்கியிருப்பதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பு நிகழ்வில் ஜுலை மாதம் (இம்மாதம்) 12-ந் தேதி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கலந்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘காலா’ திரைப்படத்திற்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈ.வி.பி. கார்டனில் ஏற்கனவே பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் துவங்கியநிலையில், இந்த செட்டில் ‘காலா’ படப்பிடிப்பு அதிக நாட்கள் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘காலா’ படத்தை கபாலி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி, பாலிவுட் நடிகர் நானா படேகர், இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி உள்ளிட்டோரும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்