முகப்புகோலிவுட்

சீனாவில் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸாகிறதா ரஜினியின் '2.0'?

  | December 05, 2018 12:44 IST
Rajini 2.0

துனுக்குகள்

  • கடந்த நவம்பர் 29-ஆம் தேதி 3 மொழிகளில் வெளியான படம் ‘2.0’
  • இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • இப்படத்தை சீன மொழியில் டப் செய்து அங்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்
‘காலா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி 3D தொழில்நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான படம் ‘2.0'. ‘எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான இதனை ஷங்கர் இயக்கியிருந்தார். ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியிருந்தார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்திருந்தார். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் ரூ.400 கோடிக்கு மேல் கல்லா கட்டிய வண்ணமுள்ளது. இந்நிலையில், இப்படத்தை சீன மொழியில் டப் செய்து அங்கு (சீனாவில்) 10,000 திரையரங்குகளில் அடுத்த ஆண்டு (2019) மே மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்