முகப்புகோலிவுட்

வைரலாகும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்

  | September 19, 2018 12:15 IST
Viswasam Movie Updates

துனுக்குகள்

  • இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார்
  • இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது
  • இதன் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது
‘வீரம், வேதாளம்’ படங்களின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் காம்போவில் கடந்த ஆண்டு (2017)வெளியான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் 58-வது படத்தையும் சிவாவே இயக்கி வருகிறார். ‘விஸ்வாசம்’என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார்.

அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.
 
படத்தின் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில், ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ எனும் தெலுங்கு பட புகழ் ரவி அவானா இந்த படத்தின் வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, அஜித், ரவி அவானா மோதும் சண்டைக் காட்சியின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்