விளம்பரம்
முகப்புகோலிவுட்

Mr.சந்திரமௌலிக்காக குரல் கொடுத்த ரெஜினா

  | May 04, 2018 10:54 IST
Mr Chandramouli Movie

துனுக்குகள்

  • கார்த்திக் – கெளதம் இணைந்து நடிக்கும் முதல் படம்
  • இதில் ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் என டபுள் ஹீரோயின்ஸாம்
  • இதன் டிரெய்லர் & பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் திரு இயக்கும் புதிய படம் ‘Mr.சந்திரமௌலி’. இதில் ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இதனை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் என டபுள் ஹீரோயின்ஸாம்.

மேலும், இயக்குநர்கள் மகேந்திரன் – அகத்தியன், சதீஷ், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா, ஜெகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, நடிகை ரெஜினா தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெஜினா தான் நடித்த படங்களிலையே முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசியிருப்பது ‘Mr.சந்திரமௌலி’ படத்திற்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்