விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் திரு இயக்கும் புதிய படம் ‘Mr.சந்திரமௌலி’. இதில் ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இதனை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் என டபுள் ஹீரோயின்ஸாம்.
மேலும், இயக்குநர்கள் மகேந்திரன் – அகத்தியன், சதீஷ், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா, ஜெகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, நடிகை ரெஜினா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ரெஜினா பங்குபெறும் பாடல் காட்சிகளின் ஷூட்டிங் மட்டுமே பேலன்ஸாம். படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.