முகப்புகோலிவுட்

‘ரெட்டை கொம்பு’ ஷூட்டிங் ப்ளான்

  | October 06, 2017 12:25 IST
Rettai Kombu

துனுக்குகள்

  • ‘பிச்சைக்காரன்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இதில் ஜி.வி.பிரகாஷ் குமாரும், சித்தார்த்தும் இணைந்து நடிக்கவுள்ளனர்
  • இப்படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
தமிழ் சினிமாவில் ‘சொல்லாமலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசி. இதனைத் தொடர்ந்து ‘ரோஜாக் கூட்டம், பூ, டிஷ்யூம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் மெகா ஹிட்டானது. தற்போது, சசி இயக்கவுள்ள புதிய படத்திற்கு ‘ரெட்டை கொம்பு’ என டைட்டில் வைத்துள்ளனர்.

டபுள் ஹீரோ சப்ஜெக்டான இதில் ஜி.வி.பிரகாஷ் குமாரும், சித்தார்த்தும் இணைந்து நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் என்பவர் அறிமுகமாகிறார். இன்னொரு ஹீரோயினின் தேர்வு நடந்து வருகிறதாம். ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி – ஹேமா ருக்மணி தயாரிக்கவுள்ளனர். சித்துக்குமார் இசையமைக்கவுள்ள இதற்கு பிரசன்னா.கே.குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்து ஹைதராபாத், புதுச்சேரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்