முகப்புகோலிவுட்

"பாக்ஸர்" படத்தில் பத்திரிகையாளராக நடிக்கும் ரித்திகா சிங்...!

  | February 11, 2019 12:56 IST
Boxer

துனுக்குகள்

  • அருண் விஜய் நடிக்கும் 27 வது படம் இது
  • விவேக் இந்த படத்தை இயக்குகிறார்
  • இறுதிசுற்று, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் ரித்திகா நடித்திருப்பார்
இறுதிசுற்று படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் கிக்-பாக்ஸரான இவர், இறுதிசுற்று படத்திலும் பாக்ஸராக நடித்திருப்பார்.

அதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்' படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். அருண் விஜய் நடிக்கும் 27 வது படம் பாக்ஸர் ஆகும். பாக்ஸர் படத்தில் பத்திரிகையாளராக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். ஏற்கனவே ஆண்டவன் கட்டளை படத்தில் பத்திரிக்கையாளராக ரித்திகா சிங் நடித்திருப்பார்.
இந்த படத்தை எக்ஸட்ரா எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கிறது. இயக்குநர் பாலாவிடம் பணிபுரிந்த விவேக் இந்த படத்தை இயக்குகிறார். வெளிநாட்டை சேர்ந்த மார்கஸ் லுஜன்பர்க் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்