முகப்புகோலிவுட்

அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கவுள்ளாரா ஆர்.கே.சுரேஷ்?

  | April 11, 2018 15:07 IST
Thala Ajith Films

துனுக்குகள்

  • இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார்
  • TFPC அறிவித்த ஸ்ட்ரைக் முடிந்த பிறகு படப்பிடிப்பு துவங்கப்படுமாம்
  • ஆர்.கே சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு (2017) ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்கவுள்ளார். இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம். ‘விசுவாசம்’ என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார்.

மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். ‘மங்காத்தா’ படத்திலிருந்தே சால்ட் & பெப்பர் லுக்கில் வலம் வந்த அஜித், இதில் மிக ஸ்டைலிஷாகவும், செம ஸ்லிம்மாகவும் தோன்றவுள்ளாராம். சமீபத்தில், படத்திற்கு பூஜை போடப்பட்டது. இப்படம் இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படுமாம். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 10-ஆம் தேதி) பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் சிவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்வீட்டரில் ஷேரிட்டார். இதனால், ‘விசுவாசம்’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. தற்போது, இது குறித்து ஆர்.கே.சுரேஷிடம் கேட்கையில் “இயக்குநர் சிவா எனது நெருங்கிய உறவினர். ஆகையால், இருவரும் சந்தித்து பேசினோம். ஆனால், ‘விசுவாசம்’ படத்தில் நான் நடிப்பதாக பரவும் செய்தி வதந்தியே” என்று தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்