முகப்புகோலிவுட்

மாதவனுடன் மீண்டும் இணைந்த பிரபல இசை அமைப்பாளர்!

  | April 24, 2019 12:57 IST
Madhavan

துனுக்குகள்

  • மாதவன் இப்படத்தை இயக்கி நடிக்கிறார்
  • இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்
  • இஸ்ரே விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படமாகிறது
நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக இயக்கி வருகிறார். இந்த படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்து வருகிறார்.

ராக்கெட்ரி - தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்திருந்தார் இந்த படம் பொருளாதார ரீதியாகவும் விர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுகுறித்த அறிவிப்பை சாம்.சி.எஸ்.தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ராக்கெட்ரி போன்ற ஒரு படத்திற்கு இசையமைப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படம் எனக்கு நெருக்கமானது. இந்த படத்திற்கு வாய்ப்பளித்த மாதவனுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரிய ஆவலோடு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இப்படம் நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் நடிக்கிறார்.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்