முகப்புகோலிவுட்

ரஜினிக்கு முதல் அமைச்சர் பதவியா?

  | January 08, 2019 13:57 IST
Rajini

துனுக்குகள்

  • ரஜினியின் பேட்ட நாளை மறுநாள் வெளியாகிறது
  • ரஜினி தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்
  • பேட்ட திரைப்படம் ரஜினிக்கு திருப்பு முனையாக இருக்கும்
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2.0 முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் “பேட்ட” படத்தை முடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
 
பேட்ட திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் வெளிவர இருக்கிறது.
 
தற்போது விடுமுறைக்கு அமெரிக்கா சென்றுள்ள ரஜினி இன்னும் இரண்டு நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  சென்னை திரும்பியதும் முழு நேர அரசியலில் அவர் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் சொன்ன கதை அவருக்கு பிடித்துவிட்டதால் அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்று நம்பபத்தகுந்த செய்திகள் வெளிவந்துள்ளன.
 
இந்த படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்றும் சாதாரண மனிதர் அரசியலுக்கு வந்து படிப்படியாக வளர்ந்து முதல் –அமைச்சர் நாற்காலியை பிடிப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் கசிந்துள்ளது.
 
எனவே இந்த படத்துக்கு 'நாற்காலி' என்று தலைப்பு வைக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. வேறு பெயர்களையும் பரிசீலிக்கின்றனர். இதர நடிகர்–நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருப்பதும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் ரஜினிகாந்த் திட்டமாக உள்ளது. இதனால் கட்சி தொடங்குவதை அவர் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது. 'வரும் ஆனால் வராது' என்பது போல் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருந்து வருகிறது.
 
மேலும் படிக்க - "இது தான் ரஜினி படம்.... பேட்ட...."

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்