முகப்புகோலிவுட்

‘அஜித் 59’-க்கு இசையமைப்பாளர் இவரா?

  | September 11, 2018 10:59 IST
Thala 59

துனுக்குகள்

  • ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்
  • இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கவுள்ளாராம்
  • சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’படத்தில் அமிதாப் பச்சன், டாப்சி நடித்திருந்தனர்
‘விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து அஜித்தின் 59-வது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இதனை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் துவங்கவுள்ளனர். இந்த படம் ஹிந்தியில் வெளியான ‘பிங்க்’ (Pink) படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான இப்படத்தில்அமிதாப் பச்சன், டாப்சி நடித்திருந்தனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம்.இந்நிலையில், இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

    தொடர்புடைய விடியோ

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்