முகப்புகோலிவுட்

போர்ஷன் கம்மிதான், ரஜினிக்காக பாடினேன் - ‘மரண மாஸ்’ எஸ்.பி.பி

  | December 05, 2018 14:03 IST
Marana Mass Single Track

துனுக்குகள்

  • ‘பேட்ட’ படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார்
  • ‘மரண மாஸ்’ பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது
  • இப்பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், அனிருத் இணைந்து பாடியிருந்தனர்
ஷங்கரின் ‘2.0' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட' மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் ‘பேட்ட' படத்தை ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. ‘ராக்ஸ்டார்' அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், ஷபீர், இயக்குநர்கள் சசிகுமார் - மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘மரண மாஸ்' (தலைவர் குத்து) பாடல் வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்த இப்பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் அனிருத் இணைந்து பாடியிருந்தனர். இந்த பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. தற்போது, இது குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசுகையில் “இந்த பாட்டுல என்னுடைய போர்ஷன் கம்மிதான்னு எனக்கே தெரியும். ஆனால், நான் பாடியது ரஜினிகாந்தோட குரலுக்கு என்பதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று தெரிவித்தார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்