விளம்பரம்
முகப்புகோலிவுட்

எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்ற ‘சாஹோ’ மாஸ் டீசர்

  | April 27, 2017 19:11 IST
Saaho Movie Teaser

துனுக்குகள்

  • எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ நாளை ரிலீஸாகவுள்ளது
  • ‘சாஹோ’ பிரபாஸின் 19-வது படமாம்
  • இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலானது
பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படமான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ நாளை (ஏப்ரல் 28-ஆம் தேதி) ரிலீஸாகவுள்ளது. தற்போது, பிரபாஸ் தனது புதிய படமான ‘சாஹோ’வில் செம பிஸியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் பிரபாஸின் 19-வது படமாம்.

இதனை சுஜீத் என்பவர் இயக்கி வருகிறார். ஆக்ஷன் ரொமாண்டிக் த்ரில்லராக ரெடியாகி வரும் இதில் பிரபாஸ் போலீஸாக வலம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. ‘யு.வி.கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் வம்சி – பிரமோத் இருவரும் இணைந்து மெகா பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனராம். ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்து வரும் இதற்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார், சாபு சிரில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
 

சமீபத்தில் படக்குழுவால் ட்விட்டப்பட்ட இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று சில நிமிடங்களுக்கு முன்பு 4 மொழிகளிலும் வெளியான மிரட்டலான மாஸ் பர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருவதோடு, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த டீசரை நாளை வெளியாகும் ‘பாகுபலி 2’வுடன் இணைத்து திரையரங்குகளிலும் திரையிடவுள்ளனர். ‘சாஹோ’ படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த விவரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2018) ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்