விளம்பரம்
முகப்புகோலிவுட்

முதல்கட்டத்தை தாண்டிய ‘சாஹோ’

  | October 11, 2017 10:51 IST
Saaho  Shooting

துனுக்குகள்

  • ‘பாகுபலி 2’ மெகா ஹிட்டாகி கோடி கணக்கில் வசூல் செய்தது
  • இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் நடிக்கிறார்
  • இதன் மாஸான ஃபர்ஸ்ட் லுக் டீஸர் செம லைக்ஸ் குவித்தது
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்ட படைப்பான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ மெகா ஹிட்டாகி கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்தது. இதனையடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஒரே நேரத்தில் 4 மொழிகளில் தயாராகி வரும் இப்படம் பிரபாஸின் 19-வது படமாம். இதனை சுஜீத் என்பவர் இயக்கி வருகிறார். ஆக்ஷன் ரொமாண்டிக் த்ரில்லரான இதில் பிரபாஸ் போலீஸாக வலம் வரவுள்ளாராம்.

பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் டூயட் பாடி ஆடி வருகிறார். மிக முக்கிய வேடங்களில் ‘கத்தி’ புகழ் நீல் நிதின் முகேஷ், சங்கி பாண்டே, அருண் விஜய், ஜாக்கி செராஃப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்சரேகர், மந்திரா பேடி ஆகியோர் நடிக்கிறார்களாம். ‘UV கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் வம்சி – பிரமோத் இருவரும் இணைந்து மெகா பட்ஜெட்டில் தயாரிக்கின்றனர். ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்து வரும் இதற்கு மதி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
 
ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மிரட்டலான மாஸ் டீஸர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சமீபத்தில், துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, ஷர்தா கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்