விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஆறுச்சாமியின் ஷூட்டிங் ப்ளான்

  | August 14, 2017 14:52 IST
Saamy 2

துனுக்குகள்

  • விக்ரம் கைவசம் 3 படங்கள் உள்ளது
  • இதில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என இரண்டு நாயகிகளாம்
  • மிரட்டலான வில்லன் வேடத்தில் பாபி சிம்ஹா நடிக்கவுள்ளார்
‘இருமுகன்’ படத்திற்கு பிறகு செம ஸ்டைலிஷாக கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், பக்கா மாஸாக விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ படத்திலும் நடித்து வந்தார் ‘சியான்’ விக்ரம். இதில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஹரியின் விறுவிறு திரைக்கதையில் தயாராகவிருக்கும் ‘சாமி’ படத்தின் 2-ஆம் பாகத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார்.

இதில் ஆறுச்சாமிக்கு ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என டபுள் ஹீரோயின்ஸாம். விக்ரமுக்கு எதிராக மிரட்டலான வில்லன் வேடத்தில் பாபி சிம்ஹா நடிக்கவுள்ளார். மேலும், பிரபு, டெல்லி கணேஷ், ஜான் விஜய், சூரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிக்கவுள்ளனர். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இதற்கு பிரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.

படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். சமீபத்தில் படக்குழுவால் டிவிட்டப்பட்ட‘சாமி 2’வின் டைட்டில் லோகோ ‘சியான்’ ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட் என்பதால், இந்த படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. தற்போது, படத்தின் ஷூட்டிங்கை வருகிற செப்டெம்பர் 15-ஆம் தேதி முதல் வெளிநாட்டில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்