முகப்புகோலிவுட்

'சீமராஜா' டீமிற்கு குட்-பை சொன்ன சமந்தா

  | March 12, 2018 12:28 IST
Sivakarthikeyan Seema Raja

துனுக்குகள்

  • இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது
  • படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் கைவசம் பொன்ராமின் ‘சீமராஜா’, ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் புதிய படங்கள் உள்ளது. இதில் ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடி வருகிறார். இப்படத்திற்கென சமந்தா பிரத்யேகமாக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டாராம்.

மேலும், சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறதாம். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். ’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இதனை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, சமந்தா சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சமந்தாவே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்