விளம்பரம்
முகப்புகோலிவுட்

செகண்ட் ஷெட்யூல் செல்லும் சமந்தாவின் 'யூ டர்ன்'

  | April 13, 2018 11:03 IST
Samantha

துனுக்குகள்

  • ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன் குமாரே இதனை இயக்குகிறாராம்
  • சமீபத்தில், இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது
  • மிஸ்ட்ரி – த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் சமந்தா நடிக்கிறார்
கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘யூ டர்ன்’. ‘லூசியா’ புகழ் பவன் குமார் இயக்கியிருந்த இப்படம் அங்கு சூப்பர் ஹிட்டானது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இதில் ஷரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் வெர்ஷன்களில் ‘குயின் ஆஃப் சவுத் இந்தியா’ நடிகை சமந்தா நடிக்கிறார்.

மேலும், ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன் குமாரே இதனை இயக்குகிறாராம். மிஸ்ட்ரி – த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படத்தை ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில், இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக ஆந்திராவில் நிறைவு பெற்றது. தற்போது, படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்