விளம்பரம்
முகப்புகோலிவுட்

'தல' முகவரி கொடுத்தவருடன் இணையும் சமுத்திரகனி

  | March 16, 2017 11:22 IST
Movies

துனுக்குகள்

  • பல சமுக கருத்துகள் உள்ள திரைப்படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை
  • இவர் இயக்கிய 6 மெழுகுவர்த்திகள் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது
  • இப்படத்திற்கு ஏமாளி என்று பெயரிட்டுள்ளார் இயக்குநர்
'தல' அஜித்தை வைத்து முகவரி என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் அடுத்ததாக சமுத்திரகனியை வைத்து படம் இயக்க உள்ளார்.

'தல' அஜித் நடிப்பில் வெளிவந்த ’முகவரி’ திரைப்படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. இப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவை வைத்து ‘தொட்டி ஜெயா’, நடிகர் பரத்தை வைத்து ‘நேபாளி’, நடிகர் ஷாமை வைத்து ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் மிக பெரிதளவில் பேசப்பட்டாலும், இயக்குநர் வி.இசட்.துரைக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமா உலகம் வாய்ப்புகளை வாரி வழங்கவில்லை.

இந்த நிலையில், நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சமுத்திரகனியின் மூலம் இயக்குநர் வி.இசட்.துரைக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இப்படத்திற்கு ‘ஏமாளி’ என்று இயக்குநர் தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பலரை சுற்றி நடக்கும் கதையாக இப்படத்தின் கதை உருவாகவி உள்ளதாகவும். நிதிஷ்-பிரகாஷ் ஆகிய இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளார்கள். சுதர்சன் என்பவர் இப் படத்திற்கு எடிட்டிங்கை செய்யவிருக்கிறார். துபாயை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்திற்கு இசைமைக்கவுள்ளார், எழுத்தாளர் ஜெயமோகன் இப்படத்திற்கு வசனங்களை எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்