முகப்புகோலிவுட்

"போதையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்" - 'சஞ்ஜூ' படத்தின் வீடியோ பாடல்

  | June 11, 2018 13:11 IST
Sanju

துனுக்குகள்

  • ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருக்கும் படம் `சஞ்ஜூ'
  • சஞ்சய் தத்தின் பயோபிக்காக உருவாகிறது இப்படம்
  • இதில் ரன்பீர் கபூர், சஞ்சய் தத்தாக நடிக்கிறார்.
நடிகர் சஞ்சய் தத்தின் பயோபிக்காக உருவாகியிருக்கிறது `சஞ்ஜூ'. ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் சஞ்சய் தத்தாக நடித்திருக்கிறார். சோனம் கபூர், அனுஷ்கா ஷர்மா, மனிஷா கொய்ராலா, பரேஷ் ராவல், விக்கி கௌஷல், பொம்மன் இரானி ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. சஞ்சய் தத்தின் திரைவாழ்கை, வெற்றி, தோல்வி, போதைப் பழக்கம், தீவிரவாத சர்ச்சை எனப் பல விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. அவரது போதைப் பழக்கத்தால் ஏற்பட்ட சிக்கல் பற்றிய படத்தில் இடம்பெறும் வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
 

"ப்ளீஸ் அப்பா, என்னைக் காப்பற்றுங்கள்... போதையில் இருந்து விடுபட நான் விரும்புகிறேன்" என ரன்பீர் சொல்லுவதாய் தொடங்குகிறது இப்பாடல். வெளியானதுமே யூ-ட்யூப் டிரென்டிங்கில் இடம்பெற்றிருக்கும் இப்பாடல் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது. படம் ஜூன் 29ம் தேதி வெளியாகவிருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்