முகப்புகோலிவுட்

வருகிறது சந்தானம் நடித்த படத்தின் பார்ட் 2

  | March 01, 2018 12:15 IST
Santhanam

துனுக்குகள்

  • ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதன் பார்ட் 2-வையும் ‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலாவே இயக்கவுள்ளார்
  • இப்படத்தை சந்தானம் தனது ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளாராம்
சேதுராமனின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு பிறகு சந்தானம் கைவசம் ஆனந்த் பால்கியின் ‘சர்வர் சுந்தரம்’, மணிகண்டனின் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, செல்வராகவனின் ‘மன்னவன் வந்தானடி’, ‘SMS’ எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் புதிய படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது.

இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க சந்தானம் கமிட்டாகியுள்ளார். ‘தில்லுக்கு துட்டு 2’ என டைட்டிலிட்டுள்ள இப்படத்தை ‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே கூட்டணியில் ஹாரர் காமெடி ஜானரில் ரிலீஸான இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

‘தில்லுக்கு துட்டு’ பார்ட் 2-வை சந்தானமே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். படத்தின் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் இதில் நடிக்கவுள்ள ஹீரோயின், இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்