விளம்பரம்
முகப்புகோலிவுட்

அதிக விலைக்குப் போன சந்தானத்தின் படம்

  | October 06, 2017 13:28 IST
Sakka Podu Podu Raja Release Date

துனுக்குகள்

  • சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி டூயட் பாடி வருகிறார்
  • இப்படத்தை நடிகர் VTV கணேஷ் தயாரித்து வருகிறார்
  • சிம்பு இசையில் வெளியான ‘கலக்கு மச்சான்’ பாடல் செம லைக்ஸ் குவித்தது
‘தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. சேதுராமன் என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்து வருகிறார். மேலும், விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத், சஞ்சனா சிங் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம்.

நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘VTV புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் VTV கணேஷ் தயாரித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நேற்று வெளியிடப்பட்ட ‘கலக்கு மச்சான்’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் வெளிநாட்டு உரிமையை ‘AP இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் – ஹோம் ஸ்க்ரீன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து அதிக விலைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இந்நிறுவனங்களே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கங்களில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. வெகு விரைவில் டீஸர், டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியாகுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்