முகப்புகோலிவுட்

'காலா' இன்ரோ பாடல் எப்படி இருக்க வேண்டும்? ரசிகர்களிடம் சந்தோஷ் நாராயணன் சர்வே

  | February 13, 2018 16:56 IST
Santhosh Narayanan Kaala

துனுக்குகள்

  • ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணையும் படம் `காலா'
  • இந்தப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்
  • இப்படம் ஏப்ரல் 27 வெளியாகவிருக்கிறது
'கபாலி' படத்துக்குப் பிறகு ரஜினி - ரஞ்சித் மீண்டும் இணையும் படம் 'காலா'. நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத் ராஜ், சாயாஜி ஷிண்டே, ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டில், சுகன்யா எனப் பலரும் நடிக்கும் இப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் " 'காலா' இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வைப்பது என்னுடைய கனவு. 'காலா' படத்தின் அறிமுகப் பாடலுக்கான இசை எப்படியானதாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுடைய ஆலோசனையை பாடலில் சேர்ப்பது எனக்குப் பெருமை. மிக்க நன்றி!" எனக் கூறி, ரெட்ரோ 80களின் இசை, ஸ்டைலிஷ் 90-2000த்தின் இசை, மார்டன் டே எலக்ட்ரோ இசை, மேற்கூறிய அனைத்தும் கலந்து ஆகிய நான்கு ஆப்ஷன்களைக் கொடுத்தார்.
 
ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாக்களிக்கத் துவங்கினர். இப்போது அந்த நான்கு ஆப்ஷன்களில் அதிக வாக்கு பெற்றிருப்பது, மேற்குறிய அனைத்தும் கலந்து என்பது. எனவே காலாவின் அறிமுகப் பாடல் வித்தியாசமான பட்டாசாக இருக்கும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்