விளம்பரம்
முகப்புகோலிவுட்

தீபாவளி ரேஸில் ‘தளபதி’யுடன் களமிறங்கும் ‘சூப்பர் ஹீரோ’

  | October 13, 2017 15:07 IST
Mersal Release Date

துனுக்குகள்

  • இது ‘சென்னையில் ஒரு நாள்’ முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லையாம்
  • ராஜேஷ் குமார் எழுதிய ஒரு க்ரைம் த்ரில்லர் நாவலின் தழுவலாம்
  • விஜய் – அட்லி காம்போவில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’
‘சண்டமாருதம்’ படத்திற்கு பிறகு ‘சூப்பர் ஹீரோ’ சரத்குமார் கைவசம் தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடங்காதே’, ஜே.பி.ஆரின் ‘சென்னையில் ஒரு நாள் 2’, பிருத்வி ஆதித்யாவின் ‘2வது ஆட்டம்’ மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுனின் ‘நா பேரு சூர்யா’, மகேஷ் பாபுவின் ‘பாரத் அனே நேனு’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘சென்னையில் ஒரு நாள் 2’ முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லையாம். இது பிரபல க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார் எழுதிய ஒரு க்ரைம் த்ரில்லர் நாவலின் தழுவலாம்.

சரத்குமாருடன் ராமதாஸ், சுஹாசினி மணிரத்னம், அஞ்சனா பிரேம், ராஜசிம்ஹன், ‘நிசப்தம்’ சாதன்யா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஸ்பை ஏஜென்ட்டான சரத்குமாருக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக நெப்போலியன் வலம் வரவுள்ளாராம். ஜேக்ஸ் பீஜாய் இசையமைத்துள்ள இதற்கு விஜய் தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ராம் மோகன் என்பவர் தயாரித்துள்ளார்.

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நாளில், ‘தளபதி’ விஜய்யின் ‘மெர்சல்’ மற்றும் வைபவ்வின் ‘மேயாத மான்’ ஆகிய 2 படங்களும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்