முகப்புகோலிவுட்

"சர்கார் ஃபைட் சீன் எல்லாம் ரசிகர்களுக்கான ட்ரீட்!" - ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் ராம் - லக்ஷ்மன்

  | October 09, 2018 13:20 IST
Sarkar Vijay

துனுக்குகள்

  • விஜய் நடிக்கும் படம் `சர்கார்'
  • ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார்
  • படம் தீபாவளிக்கு வெளியாகிறது
`துப்பாக்கி', `கத்தி' படங்களுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படம் `சர்கார்'. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதா ரவி, யோகிபாபு, பழ.கருப்பையா எனப் பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்கமாலி டைரீஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை ராம் லக்ஷ்மன் என்கிற இரட்டையர்கள் வடிவமைத்துள்ளனர். இவர்கள் தெலுங்கில் `ரங்கஸ்தளம்', பரத் அனே நேனு, சரைனோடு எனப் பல படங்களில் பணியாற்றியுள்ளனர். இவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "தெலுங்கில் நாங்கள் பணியாற்றிய `துவ்வாட ஜெகன்னாதம்' படத்தைப் பார்த்திட்டுதான் முருகதாஸ் சார் எங்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். அவருக்கு முதல்ல நன்றி சொல்லிக்கறோம்.

ஆடியோ ஃபங்க்ஷன்ல விஜய் சாருக்கு இருக்கும் மாஸ் ரசிகர்களைப் பார்த்து எங்களுக்கு பிரம்மிப்பா இருந்தது. இந்தப் படத்தில் வேலை செய்யறதுக்கு முன்னால அவர் முந்தைய படங்கள் எல்லாம் பார்த்து ஸ்டடி பண்ணோம். அவருக்கு புதுசா இருக்கணும்னு நாங்க வடிவமைக்கரத்தை ரிகர்சல் பண்ணும்போதே பார்த்துட்டு ஒரே டேக்ல பண்ணிட்டு போயிடுவார். அவரப் பார்த்து நாங்க கத்துகிட்டது, நாம கொஞ்சமா பேசணும், நம்ம வேலை நிறைய பேசவைக்கணும். புல்லட் ட்ரைன்லாம் வேகமா போகும் ஆனா சத்தம் வராதில்ல அதுமாதிரிதான் அவரும். இந்தப் படத்தில் அவருடைய ஃபைட் சீன் எல்லாம் வேற மாதிரி இருக்கும். ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு." எனக் கூறினார்கள்
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்