விளம்பரம்
முகப்புகோலிவுட்

துவங்கியது சசிகுமாரின் புதிய படம்

  | May 10, 2017 18:14 IST
Sasikumar Next Film

துனுக்குகள்

  • சசிகுமார் – முத்தையா கூட்டணியில் உருவாகும் 2-வது படம்
  • ஹீரோயினாக நடிக்க முதலில் ஹன்ஷிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது
  • ‘சாட்டை’ ஹீரோயின் ஏற்கெனவே 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்
‘பலே வெள்ளையத் தேவா’ படத்திற்கு பிறகு சசிகுமாரின் புதிய படத்தை முத்தையா இயக்கவுள்ளார். இவர்கள் காம்போவில் ஏற்கெனவே வெளியான ‘குட்டிப்புலி’ ஹிட்டானதால், இந்த படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. ‘கொடிவீரன்’ என டைட்டிலிட்டுள்ள இப்படத்தை சசிகுமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கம்பெனி புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்கவுள்ளார்.

இதில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க முதலில் ஹன்சிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது. இந்நிலையில், ஹீரோயினாக ‘சாட்டை, குற்றம் 23’ புகழ் மகிமா நம்பியார் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், ‘ரேனிகுண்டா’ சனுஷா, பாலசரவணன் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதன் ஷூட்டிங்கை பூஜையுடன் இன்று (மே 10-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளனர். இதனை சசிகுமாரே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாக தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை சிவகங்கையில் படமாக்கவுள்ளனர். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மகிமா நம்பியார், ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’, தினேஷின் ‘அண்ணனுக்கு ஜெய்’, அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஆகிய படங்களில் செம பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்