முகப்புகோலிவுட்

‘அசுரவதம்’ படத்தின் டீசரை ட்வீட்டிய கெளதம் மேனன்

  | March 07, 2018 19:02 IST
Sasikumar Film

துனுக்குகள்

  • சசிகுமார் கைவசம் 2 படங்கள் உள்ளது
  • இப்படத்தை எம்.மருதுபாண்டியன் இயக்கி வருகிறார்
  • ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
‘கொடிவீரன்’ படத்திற்கு பிறகு நடிகராக சசிகுமார் கைசவம் ‘நாடோடிகள் 2’ மற்றும் ‘அசுரவதம்’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘அசுரவதம்’ படத்தை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ புகழ் எம்.மருதுபாண்டியன் இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா டூயட் பாடி ஆடியுள்ளார்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்து வருகிறார். சமீபத்தில், இதன் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
 
 


இன்று (மார்ச் 7-ஆம் தேதி) மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் டீசரை பிரபல இயக்குநர் கெளதம் மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்