விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஓவியாவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸால் ஆரவ்வை கலாய்த்த காமெடி நடிகர்

  | September 05, 2017 17:35 IST
Oviya Next Film

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஓவியா
  • ஓவியா டிவிட்டரில் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பற்றி கூறியிருந்தார்
  • ஆரவ்வின் காதல் விஷயத்தில் ஓவியா மன உளைச்சலுக்கு ஆளானார்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். விமலின் ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக என்ட்ரியான ஓவியா, ‘பிக் பாஸ்’ மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். ஓவியா நடிப்பில் வெளியான கடைசி தமிழ் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’.
தற்போது, ஓவியா கைவசம் விஷ்ணுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஆரவ்வின் காதல் விஷயத்தில் ஓவியா மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யவும் முயன்றார். ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறிய பின்பும், தான் இன்னும் ஆரவ்வை காதலிப்பதாக கூறியிருந்த நிலையில், நேற்று (செப்டெம்பர் 4-ஆம் தேதி) ஓவியா டிவிட்டரில் தனது “ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் : SINGLE & SATISFIED” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் டிவிட் தட்டிய காமெடி நடிகர் சதீஷ், “அப்போ அந்த தம்பி 100 நாட்களுக்கு அப்புறமும் உள்ளேயே இருக்க வேண்டியது தான் போல” என்று ஆரவ்வின் பெயரைக் குறிப்பிடாமல் கலாய்த்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்