விளம்பரம்
முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘சதுரங்க வேட்டை 2’ டீஸர்

  | August 11, 2017 10:24 IST
Sathuranka Vettai 2 Teaser

துனுக்குகள்

  • அரவிந்த் சாமி கைவசம் 4 படங்கள் உள்ளது
  • ‘சதுரங்க வேட்டை’ முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இதன் மோஷன் போஸ்டரை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்
‘போகன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு அரவிந்த் சாமி நடித்து வந்த நிர்மல் குமாரின் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, செல்வாவின் ‘வணங்காமுடி’, சித்திக்கின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய இரண்டு படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர அரவிந்த் சாமி கைவசம் கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’ உள்ளது. இதில் ‘சதுரங்க வேட்டை 2’ படத்திற்கு முதல் பாகத்தை இயக்கிய H.வினோத் கதை – திரைக்கதை – வசனம் எழுதியுள்ளார், ‘சலீம்’ புகழ் NV.நிர்மல் குமார் இயக்கி வருகிறார்.

அரவிந்த் சாமிக்கு ஜோடியாக த்ரிஷா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், நாசர், பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஸ்வமித்ரா இசையமைத்து வரும் இதற்கு KG.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், SP.ராஜா சேதுபதி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘பிக்சர் ஹவுஸ்’ நிறுவனம் சார்பில் நடிகர் மனோபாலா தயாரித்து வருகிறார். ஏற்கெனவே, படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியது.
 

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் படத்தின் டிரையிலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்