முகப்புகோலிவுட்

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தில் இணைந்துள்ள புதிய பிரபலம்...?

  | May 14, 2019 21:01 IST
Sathyaraj

துனுக்குகள்

  • இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கிறார்
  • இப்படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்
  • இந்த படத்தை சூரஜ் தயாரிக்கிறார்
கார்த்தியின் சகோதரியாக ஜோதிகா நடிக்கும் படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதாவும் நடிக்கிறார்கள். அன்சன் பால் வில்லனாக இப்படத்தில் நடிக்கிறார்.
 
 இந்நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
பெயரிடப்படாத திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
 
வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்