முகப்புகோலிவுட்

பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படத்தில் நடிகர் சத்யராஜ்

  | April 13, 2019 16:21 IST
Ponniyin Selvan

துனுக்குகள்

  • மனிரத்னம் இப்படத்தை இயக்கி வருகிறார்
  • இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
  • கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்' நாவலைப் படமாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். பெரும் நட்சத்திரங்களான நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
 
பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடிப்பதாக கூறப்பட்டது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்