விளம்பரம்
முகப்புகோலிவுட்

'விஜய் 62'வில் இணைகிறாரா 'வனமகன்' சயிஷா?

  | February 10, 2018 11:49 IST
Thalapathy 62 Cast

துனுக்குகள்

  • விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இப்படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவுள்ளனர்
  • தளபதிக்கு ஜோடியாக சயிஷா நடிப்பதாக கூறப்படுகிறது
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இதன் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தில் இன்னொரு ஹீரோயினாக ‘வனமகன்’ புகழ் சயிஷா நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது குறித்து நடிகை சயிஷா கூறுகையில் “நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. அவருடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உள்ளது. ஆனால், ‘தளபதி 62’வில் நான் நடிப்பதாக பரவி வரும் செய்தி வதந்தியே” என்று தெரிவித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்