முகப்புகோலிவுட்

மீண்டும் சமுத்திரக்கனியுடன் கைகோர்த்த சீனு ராமசாமி

  | April 16, 2018 11:31 IST
Samuthirakani

துனுக்குகள்

  • இயக்குநராக சீனு ராமசாமி கைவசம் 3 படங்கள் உள்ளது
  • ‘கண்ணே கலைமானே’வின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது
  • ‘நீர்ப்பறவை’ படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்
‘கூடல் நகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதனையடுத்து ‘தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை’ போன்ற வெற்றிப் படங்களை சீனு ராமசாமி இயக்கினார். இவர் இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

தற்போது, இயக்குநராக சீனு ராமசாமி கைவசம் ‘கண்ணே கலைமானே’ மற்றும் ‘மாமனிதன்’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா டூயட் பாடி ஆடியுள்ளார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
 
இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் கதாநாயகனாக இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சீனு ராமசாமியே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். ஏற்கெனவே, சீனு ராமசாமி இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்